ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய வாசகம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உங்களுடன் உங்களது மகனையும் அழைத்து சென்றுவிடுங்கள் என எழுதி வைத்திருக்கின்றார்.
போருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இந்த கல்லறையை சேதப்படுத்தி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐரினா கைது செய்யப்பட்டு இருக்கின்றார். புதினின் பெற்றோர் கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த பின்பும் அதிலிருந்து தப்பித்து இந்த பெண் கல்லறையை அடைந்துள்ளார். அந்த கல்லறையில் இவர் ஒரு கொலைகாரர் எனவும் அவரது மரணத்திற்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது என கூறியுள்ளார். இதனை அடுத்து கொலைகாரரின் பெற்றோரே அவரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் அவரால் எங்களுக்கு நிறைய வலி ஏற்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனை அறிந்த கல்லறையின் பாதுகாவலர் உடனடியாக போலீசில் தகவல் தெரிவித்து இருக்கின்றார். அதன் பின் சிசிடிவி கேமராவில் அந்தப் பெண் பனேவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு கல்லறையை அரசியல் ரீதியாக அல்லது பகைமைக்காக சேதப்படுத்தியதற்காக ஐந்து வருடம் சிறை தண்டனை கிடைக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் புதினின் பெற்றோர் ரஷ்ய அதிபராக புதன் பதவி ஏற்கும் முன்னரே உயிரிழந்து விட்டனர். இந்த நிலையில் பனேவாவுக்கு வருகிற நவம்பர் எட்டாம் தேதி வரை வீட்டுக்காவல் விதிக்கப்படுகிறது என நீதிபதி தண்டனை அறிவித்திருக்கின்றார். இதனை அடுத்து இணையதளம் தொலைபேசி அல்லது மெயில் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.