Categories
அரசியல்

இவர் சொல்றது… “முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி இருக்கு”… ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு அணையை ஓபிஎஸ் ஆய்வு செய்தது இல்லை என்று துரைமுருகன் கூறியதற்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை, பார்வையில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் 2021 ஆண்டுகளிலும் மாவட்ட பகுதி அமைச்சர் என்ற முறையிலும் படகில் முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் பாக்கியத்தை பெற்றதோடு, பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து அனுபவம் எனக்கு உண்டு.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் 14 முறை நான் முல்லை பெரியாறு அணை பகுதிக்கு சென்று தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டு ஆய்வு செய்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையே முல்லை பெரியாறு அணையியுடன் பின்னிப்பினைந்த ஒன்று. உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது முல்லை பெரியாறு அணையை நான் பார்த்ததே இல்லை என்று அமைச்சர் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த பிரச்சினை குறித்தும் பேசக்கூடிய முழு தகுதி அதிமுகவுக்கு உள்ளது என்பதை துரைமுருகன் அவர்களுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |