மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூக வலைத்தளத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ப்ரியா வாரியர் சமீபத்தில் தனுஷ்தான் என்னுடைய க்ரஷ் என்று அவரது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேடையில் பேசிய அவர், தனுஷுடன் நடிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். ஹாலிவுட் வரை சென்றுவிட்டாலும் மலையாள படங்களில் இதுவரை தனுஷ் நடித்ததில்லை. ஆனாலும் அவருக்கு கேரளாவில் தீவிர ரசிகர் பட்டாளம் உள்ளது.