Categories
தேசிய செய்திகள்

“இவர் தான் ரியல் ஹீரோ”…. சிங்கக்குட்டியை காப்பற்றிய வீடியோ…. குவியும் பாராட்டுகள்…!!

குஜராத்தில் வலையில் சிக்கியுள்ள சிங்கக் குட்டியை வன ஊழியர்கள் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் வேறு சில காரணங்களுக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலைக்குள் சிங்கக்குட்டி ஒன்று மாற்றிக்கொண்டுள்ளது. அந்தக் குட்டியை காப்பாற்ற முடியாத தாய் சிங்கம் அதன் அருகில் அமர்ந்து குட்டியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இதைக்கண்ட வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் களஆய்வாளர்கள் அவர்கள் உயிரை பற்றிக்கூட கவலைபடாமல் வலையில் மாட்டி இருந்த சிங்கக் குட்டியை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிங்கக் குட்டியை துணிச்சலுடன் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |