Categories
பல்சுவை

இவர் பெரிய ஆளு போலயே…. தேர்தலில் மோசடி செய்ததற்காக…. கின்னஸ் சாதனை படைத்துள்ளார்….!!

ஒரு நாட்டின் மக்கள் பொதுவாழ்வில்‌ பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆகும். இந்நிலையில் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது பல மோசடி வேலைகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தேர்தலில் மோசடி வேலைகள் செய்ததற்காகவே ஒருவருக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது. கடந்த 1927-ம் ஆண்டு லைபீரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பால்கர் என்பவரை தோற்கடித்து 3-வது முறை ஜனாதிபதியாக சார்லஸ் டி.பி கிங் என்பவர் வெற்றி பெற்றார்.

அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 15,000 ஆகும். ஆனால் சார்லஸ் டி.பி கிங் தேர்தலில் 2,40,000 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் பால்கருக்கு 9,000 வாக்குகள் கிடைத்து இருந்தது. மேலும் நாட்டின் மொத்த மக்கள் தொகை 15,000-மாக  இருந்த போதில் சார்லஸ் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் மோசடி வேலைகள் செய்து வெற்றி பெற்றிருந்தார். ஆனால் எப்படி மோசடி செய்தார் என்பது தெரியவில்லை. மேலும் இவர் மோசடி வேலைகள் செய்து அதிக வாக்குகள் பெற்ற காரணத்திற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

Categories

Tech |