Categories
தேசிய செய்திகள்

இவர் மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும்…. ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய மத்திய மந்திரி…. எதற்கு தெரியுமா….?

ராகுல் காந்தி மீது மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்தியாவின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் ராகுல் காந்தி இந்த யாத்திரையை மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு ராகுல் காந்தி பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த யாத்திரை தடுக்க முடியாது என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஊழல்வாதிகளை சேர்க்கவே காங்கிரஸ் இந்த யாத்திரை நடத்துகிறது என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “தற்போது சீனா, கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது இந்தியாவிலும் தொற்று  ஏற்படலாம். ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் ஒரே ஒரு குடும்பத்தை பற்றி மட்டும் கவலைப்படுகிறது. அதாவது இமாச்சலபிரதேச முதல் மந்திரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதா, அவர் நலமாக இருக்கிறாரா என்பதை பற்றி தான் ராகுல் காந்தி பிற தலைவர்களிடம் கேட்கிறார். எனவே அவர் நாட்டு மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |