முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது.
ஆனால் வடமாநிலத்தவர்களுக்கு ஊசி உள்ளிட்ட கொள்முதலை வழங்கியது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைக்கிறார். ஆனால் அவருடைய பிறந்தநாளுக்கு டுவிட்டரில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால் கருணாநிதியே இல்லை. எம்ஜிஆர் தான் கருணாநிதியை முதலமைச்சராக முன்மொழிந்தார். அதோடு மட்டுமில்லாமல் எம்ஜிஆர் தான் திமுகவை பட்டி, தொட்டியெங்கும் வளர்த்தார் என்று ஜெயக்குமார் பரபரப்பாக பேசியுள்ளார்.