14-வது ஐபிஎல் சீசன் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
14வது ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 92 ரன்னில் சுருண்டது. இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. இதில் சுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாடினர் .இறுதியில் கொல்கத்தா அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
Can't see 🥺💔💔 good time will come soon #Kohli ❤️#RCB #ViratKohli #Kohli pic.twitter.com/124YFLzZxC
— गौरव सिंह राजपुरोहित (@Gauravrazz1220) September 20, 2021
இந்நிலையில் போட்டியில் படுமோசமான தோல்விக்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போட்டியின்போது அணியின் ஒவ்வொரு வீரர்களும் ஆட்டமிழந்தது வெளியேறியதை டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் விராட் கோலி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் .தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. எப்போதும் போட்டியில் உற்சாகமாக இருக்கும் விராட் கோலியை இப்படிப் பார்ப்பது வருத்தமாக இருப்பதாகவும், இந்த கஷ்ட காலம் விரைவில் மாறும் என்று கோலிக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.