புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வைத்து புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திராவிட கழக மாவட்ட தலைவர் ரங்கசாமி, மண்டல செயலாளர் திராவிடமணி, மாவட்ட செயலாளர் வைகரை, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல், அசோகன், விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் பரிக்கப்படுகிறது, இதற்கான போராட்டத்தை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது.
இந்நிலையில் வருங்கால தமிழகத்தை பாதுகாக்க வேண்டியது நாம் அனைவரின் கடமையாகும். தமிழக அரசு சமத்துவம், சமூக நீதிக்காக சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் குரல் எழுப்பி வருகிறது. மேலும் மக்களால் தேர்ந்தெடுத்தவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை நியமனத்தால் வந்தவர்கள் நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் நீட்தேர்வு, புதிய கல்விக்கொள்கை மீண்டும் புதிய வடிவில் குலக்கல்வி திட்டத்தை புதுபிக்க நினைக்கும் செயலாகும். எனவே நாம் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.