வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை மேலாளர் பெனட்டிகிறிஸ்டோதாஸ் போன்றோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் விளக்க உரை ஆற்ற ஆணையர் பாலு பேசியபோது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது மாணவப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டும். மேலும் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். நாம் இப்போது பயன்படுத்தி வரும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பொருட்களை அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பால்பாயிண்ட் பேனாக்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்தவை. அதனால் இனிமேல் அந்த வகையான பேனாக்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருடம் முழுவதும் தன்மை கொண்ட மை ஊற்றி எழுதும் பேனாக்களையே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பின் ரூபாய் 15,000 மதிப்பில் இந்திய வங்கி சார்பில் பற்றி எழுதும் பேனா, பேப்பர் கூல் மூலமாக தயாரிக்கப்பட்ட காகித பென்சில்கள் போன்றவை மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் வால்பாறை இந்தியன் வங்கி கிளை மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளர் காளியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.