Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவற்றை பொதுமக்கள் உடனடியாக அகற்ற வேண்டும்….. இரும்பு கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில்  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகும். இதன் மூலம் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் ஜீ. தமிழ்ச்செல்வி பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இரும்பு கடைகளில்  ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி மேஜர் மருத்துவர் சிவஞானம், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள இரும்பு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் உள்ள  பொருட்களில் மழை நீர்கள் தேங்கி அதில் கொசு உற்பத்தி இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 2 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் தங்களது  பகுதிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள தேங்காய் ஓடு, டயர், பெயிண்ட் டப்பாக்கள், ஆட்டுரல் போன்ற பொருட்களை அகற்றி மழை நீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |