நெல்லையில் தண்ணீர் குடிக்க சென்ற முதியவர் நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அன்னத்தாய் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அன்னத்தாயின் வீட்டிற்கு அருகே மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது முத்தையா அன்னதாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
அவர் முத்தையாவை வீட்டிற்குள் சென்று குடித்துக் கொள்ளுமாறு கூறினார். இதற்கிடையே வீட்டினுள் சென்ற அவர் அங்கிருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியையும், 500 ரூபாயையும் திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து அன்னத்தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் முத்தையாவின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.