பிரபல நடிகரின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக நரேன் வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான நிழல் குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இவர் தற்போது மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நரேன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான மஞ்சு என்பவரை நரேன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் தன்மையா என்ற மகள் இருக்கும் நிலையில், மஞ்சு மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் 15-வது திருமண நாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் நரேன் தன்னுடைய மனைவி 2-வதாக கர்ப்பம் அடைந்து இருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.