பணம் மற்றும் தங்கநகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழ ஆவணி பகுதியில் ரமேஷ் குமார்-ஜெயின் தம்பதியினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் மர பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகையும், 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போனதை கண்டு ஜெயின் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் பெண் மீது சந்தேகம் இருப்பதாக ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.