Categories
தேசிய செய்திகள்

இவைகளுக்கெல்லாம் இரத்து…. ”இனிமேல் ஜிஎஸ்டி வரி இல்லை” மத்திய அரசு செம முடிவு …!!

பெட்ரோலிய பொருட்களை தற்போது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ரெமிடிசிவர் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு வழங்கப்பட்ட சலுகை  டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புற்றுநோய் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்க படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Categories

Tech |