வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் தமிழகம் சிறக்குமென கமல் டுவீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் தாக்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன்.
மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும். வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பட்ஜெட் குறித்து கமலஹாசன் பதிவிட்ட டுவிட்டில், விவசாயத்திற்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்குரியது. வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பவை நடைமுறைக்கு வந்தால் தமிழகம் சிறக்கும் என்று கூறினார். மேலும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.