Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவை அனைத்தும் பதற்றமானவை… துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக 720 துணை இராணுவ வீரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட 1,850 காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 3,250 பேர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லுதல், பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 142 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளனர். இதற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் தலா நான்கு பேர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து காவல்துறையினரும் ஈடுபடுகின்றனர்.

Categories

Tech |