Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ மூட்டையா… எங்க எடுத்துட்டு போறீங்க..? தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை-நாகூர் மெயின்ரோடு அரசு ஐ.டி.ஐ. அருகே பறக்கும் படை தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பேருந்தில் ஆவணம் இல்லாமல் 7 சேலை மூட்டைகள் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின் சேலைக்கான உரிய ஆணவங்களை பேருந்தில் சேலையை எடுத்து வந்த மொய்தீன் என்பவர் அதிகாரியிடம் கொடுத்தார். இதையடுத்து 7 சேலை மூட்டைகளும் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |