அதிக பாரம் ஏற்றி வந்த குற்றத்திற்காக அதிகாரிகள் லாரி உரிமையாளர்களிடம் இருந்து 11 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜராஜேஸ்வரி கருப்பையன் ஆகியோர் செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி அதிகாரிகள் 33 வாகனங்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு உரிமையாளர்களுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வரக்கூடாது என அதிகாரிகள் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.