Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இவ்ளோ வெயிட் ஏற்ற கூடாது” 14 லாரிகள் பறிமுதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 லாரிகளை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து 2 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை எடுத்து அனுமதி பெற்று கனிம வளங்களை உரிய அளவுடன் ஏற்றி செல்லும் வாகனங்கள் எந்த நேரத்திலும் சொல்லலாம். ஆனால் அனுமதிக்கு மேல் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |