ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது.
இத்தாலி நாட்டில் ஒருவருக்கு தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதுடையவரை சோதனை செய்தபோது, அவருக்கு ஒரே நேரத்தில் COVID-19, குரங்கம்மை மற்றும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஸ்பெயின் நாட்டில் ஒரு பயணத்திற்குப் பிறகு திரும்பியதாகவும், ஒன்பது நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளை கண்டதாகவும் கூறப்படுகின்றது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு முதலில் அவர் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த நபர் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அவரது உடலில் தடிப்புகள் மற்றும் கொப்புளங்கள் தோன்றிய பிறகு, சுகாதார அதிகாரிகள் கூத்துதலாக சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவருக்கு குரங்கம்மை, கோவிட்-19 மற்றும் எச்.ஐ.வி மூன்றும் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் “குரங்கம்மை மற்றும் கோவிட்-19 அறிகுறிகள் ஒன்றுடன் ஒன்று சேரலாம்” என்றும் “பாலியல் உடலுறவுதான் இது பரவுவதற்கான முக்கிய வழியாகும்” என்றும் வெளிப்படுத்தினர். அதே சமயம், நோயாளியின் எச்.ஐ.வி பாதிப்பு “ஒப்பீட்டளவில் சமீபத்தியதாக” இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த நபர் ஜூன் மாதம் ஸ்பெயினில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தார், ஜூலை 2 அன்று அவருக்கு COVID-19-க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் ஸ்பெயினில் தங்கியிருந்த போது ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள், அவர் BA.5.1 வகை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டியது. மேலும் அந்த நபருக்கு வைரஸ் ஹெபடைடிஸ், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் மற்றும் கோனோரியா ஆகியவை இல்லை என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தினர், ஏனெனில் இந்த நோய்களுக்கு பரவலாக சிகிச்சை இல்லை, அதே நேரத்தில் மருத்துவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.