Categories
உலக செய்திகள்

“இவ்வளவு உயிரிழப்புகளா..?” வீரியமிக்க கொரோனாவால் தத்தளித்து வரும் நாடு… காப்பாற்றிய சீன தடுப்பூசி..!!

பிரேசிலில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் செயல்திறன் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவாக் தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  

பிரேசிலில் தற்போது அமெரிக்காவை விடவும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2286 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது வரை சுமார் 11.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 2 ,70,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகில் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வந்த கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தற்போது பல மடங்குகளாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தான் பிரேசிலில் சில மாதங்களாக பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

மேலும் பிரேசிலில் Aam zonas பகுதியில் p1 மற்றும் ரியோடி ஜெனிரோவில் p2 ஆகிய உருமாறிய இரண்டு வைரஸ்கள் கண்டறியப்பட்டதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த வகை வைரஸ்கள் தான் பிரேசிலில் மிகவும் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் உருமாறிய வைரஸ்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் தயாரிப்பான Coronovac என்ற தடுப்பூசி தான் குறிப்பிட்ட இந்த இரண்டு வகை வைரஸ்களை எதிர்த்து செயல்படக்கூடிய அதிக திறன் கொண்டுள்ளது என்று Instituto Butantan Biological Research Centre நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |