Categories
உலக செய்திகள்

“இவ்வளவு குறைவான சம்பள உயர்வா..? உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம்.. அரசை எதிர்த்து NHS ஊழியர்கள் கண்டனம்..!!

பிரிட்டன் அரசு சுகாதார பணியாளர்களுக்கு குறைந்த சம்பள உயர்வை வழங்கியதால் தொழிற்சங்க நிறுவனங்கள் அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். 

பிரிட்டன் அரசு தங்களின் NHS பணியாளர்களுக்கு சம்பள உயர்வை 1% அளிப்பதாக அறிவித்தது. எனவே குறைந்த ஊதிய உயர்வை அளிப்பதாக சுகாதார பணியாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்ததி வருகின்றனர். இதனால் ஒரு சதவீத சம்பள உயர்விற்கான முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதாவது, தங்கள் பணியாளர்கள் தான் கடந்த வருடம் நாடு முழுவதையும் உயிருடன் வைத்திருந்தார்கள் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் இந்த முடிவு “பரிதாபத்திற்குரியது” என்று தெரிவித்ததோடு பணி நிறுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகியுள்ளது.

மேலும் 12.5% சம்பள உயர்வு தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து NHSன் மூன்றாம் பெரிய தொழிற்சங்கமான United பணிநிறுத்தம் குறித்து  பரிசீலிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் என்பவருக்கு சம்பள உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி BMA, Royal College of Midvives  Royal College of Nurshing unison போன்ற தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

Categories

Tech |