திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துமதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்து இருக்கிறார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களிலுள்ள சொத்துக்களின் மதிப்பானது ரூபாய்.85,705 கோடி என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகள் பற்றி இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2014-க்கு பிறகு தேவஸ்தானத்திற்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்ககூடாது என முடிவுசெய்யப்பட்டதாக சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை முன்னிட்டு கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூபாய்.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.