இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர்.
அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று ரஹ்மான் தெரிவித்திருந்தார். அதன் விலையானது சுமார் 2 கோடி ரூபாயை விட அதிகம் என்று கூறப்படுகிறது. தற்போது மகள்கள் 2 பேரும் அந்த கார் முன்பு நின்று எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.