Categories
அரசியல்

இவ்வளவு சாதனைகளா?… நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு தசாவதாரம்….!!!!

நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2  அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.   மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் படிப்பை விட கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தது தான். இதனால் டி.கே.எஸ். என்ற  நாடக குழுவில் சேர்ந்தார். பெண் சிவாலயா என்ற நாடகக் குழுவை தன் நண்பர்களோடு சேர்த்து தொடங்கினார். சில மாதங்கள் அதில் செயல்பட்டார்.அதன் பின்னர் திரைப்படத்துறையில் நடன அமைப்பாளராக இருந்து தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து கலைப் பணியாற்றினார்.

மேலும் நடன கலைஞராவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா கமலின் முதல் திரைப்படம். தனது 6  வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஜனாதிபதியின் கைகளால் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனை  தொடங்கி கன்னியாகுமரி என்ற மலையாள படத்தில் முதல் கதாநாயகன், அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகன், தசாவதாரத்தில் உலகநாயகன் என தொடர்ந்து இன்று வரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை 4 தேசிய விருதுகளும், 10 தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் போன்ற இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளார்.

இதனையடுத்து  ஜெமினி கணேசன்-சாவித்திரி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கமலுக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த பல படங்களில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு 1970 ல் தேவர் பிலிம்ஸ் தயாரித்த மாணவன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார் கமல். அதற்கு பிறகு அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த கமலுக்கு அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் படங்களின் மூலம் பிரேக் கொடுத்தார் இயக்குனர் பாலசங்கர்.

அதற்கு பிறகு மலமல என பட வாய்ப்புகள் கமலுக்கு வந்து குவிந்தது. அவர் 74-ல் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, 75 ல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் ஆகியவை கமலஹாசனுக்கு தனி அடையாளத்தை அளித்தது.இதற்கு பிறகு திருப்பி பார்க்கவே நேரம் இல்லாத அளவுக்கு படங்களை நடித்து குவித்தார் கமல். இந்நிலையில்  மலையாளத்தில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட படங்களிலும், 15-க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்திருக்கிறார் கமல். ஏழுக்கும்  மேற்பட்ட படங்களுக்கு கதை, 3  படங்களுக்கு கதை- திரைக்கதை, 2  படங்களுக்கு திரைக்கதை-வசனம் என சுமார் பத்து படங்களுக்கு திரைக்கதை,எட்டுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியர், நான்கு படங்களுக்கு இயக்குனர், 70-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர், திரைப்பட பாடலாசிரியர் என திரை உலகில் பல துறையிலும் கால் பதித்து சாதனை படைத்தவர்.

இதனையடுத்து ரஜினிகாந்தும்  கமலஹாசனும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகராக இருந்து அரசியலில் இறங்கிய  எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். ஆகவே வெற்றிகரமாக  அடுத்த தலைமுறை நடிகர்களாக கமல் ரஜினியும் எம்ஜிஆரை போல அரசியல் ஈடுபடுவார்களா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக பலரிடம் இருந்தது. ஆனால் கமல்  அரசியலில் இருந்து விலகி இருந்தார். ஆனால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிமான மு. கருணாநிதி செயலிழந்த நிலையில் இருந்த போது கமலஹாசனிடம் மனமாற்றம் ஏற்பட்டது. ரஜினிகாந்த் பொருத்தவரை சமீப காலத்தில் தான் அரசியலைப் பற்றி நேரடியாக பேசினார் என்றாலும் அவர் தன் திரைப்படங்களில் மூலம் தன் அரசியலில் பரவேசம் குறித்து கருத்துகளை நீண்ட காலமாகவே தெரிவித்ததாக அவரது ரசிகர்கள் கருதினார்கள். அவரும் அதற்கேற்றபடி பூடகமான அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் கமல்ஹாசன் சமீப சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல் தொடர்பாக எதையும் பேசவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பாக  அளித்த பேட்டியில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது தான் அரசியலுக்கு பொருத்தமான வரி இல்லை என்று பதில் அளித்தார் கமல். இதனை எடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு கமல் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதோடு அவர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 2013 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு  காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக் கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த படத்துக்கு தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடை விதித்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன். தமிழ்நாடு அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருப்பது என்னை  மட்டுமல்ல நமது நாட்டையே அவமதிக்கும் செயல். மேலும் மிரட்டல் தொடர்ந்தால் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிப்பேன் என குறிப்பிட்டார்.

அதன் பிறகு அவர் இஸ்லாமிய அமைப்புகளை சந்தித்து பேசிய பிறகு பிரச்சனை  முடிவுக்கு வந்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி படம் வெளியானது. இதனையடுத்து 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மதுரையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்திய கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவக்கினார். இந்த கட்சியின் துவக்க விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் ஒரு இடத்தையும் வெல்லவில்லை என்றாலும் சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்றது.

சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 10 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளையும் பெற்றது. ஆனால் கமல் கட்சி துவங்கியதில் இருந்து அவரது கொள்கை எத்தனை அடிப்படையாக வைத்தது எந்த குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்து பேசிய போது என்னுடைய கொள்கை இடம்மல்ல , வலது மல்ல மையத்தில் இருப்போம் எனக் கூறினார். இவர் கூறியதற்கு அர்த்தம் பலருக்கும் விளங்கவில்லை. இதனை எடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது விந்திய மலைக்கு இந்த பக்கம் இருக்கும் தென் இந்தியா சுயமரியாதை இந்தியா என்று பேசி திராவிட கட்சி நிறைய உற்சாகப்படுத்தினார். மதுரையில் கட்சி துவங்கிய தினத்தில் ஊழல் தான் எல்லா தீமைகளுக்கும் காரணம் என்பதால் அதை ஒழிப்பதற்கு முன்னுரிமை என்று நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்க பாடுபடுவோம் என்றும் சாதி மதம் மட்டுமே நீக்கப்படும் என்றும் பேசினார்.

Categories

Tech |