Categories
பல்சுவை

இவ்வளவு சிறிய உருவமா?…. உலகையே வியக்கவைத்த சாதனை மாடு…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் பல்வேறு சிறப்பு குணங்களை கொண்டிருக்கும். அதிலும் சில உயிரினங்கள் மக்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். சில உயிரினங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூட இடம் பிடித்துள்ளன. அப்படி ஒரு உயிரினத்தைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமம் தான் அத்தோலி. சில காலங்களில் இந்த கிராமத்தை பற்றி அந்த ஊர் மக்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் கடந்த சில வருடங்களாக உலக வரைபடத்தில் இதன் பெயர் இடம் பிடித்துவிட்டது. காரணம் அந்த ஊரில் இருக்கும் ஒரு பசு தான். இதுதான் உலகத்திலேயே மிகச் சிறிய உருவம் கொண்ட பசு. சராசரியாக ஒரு பசு 4 முதல் 7 அடி உயரம் வரை இருக்கும். எடை 313 கிலோ வரை இருக்கும்.

ஆனால் மாணிக்கம் என்ற பெயர் கொண்ட இந்த பசுவின் உயரம் 1.75 அடி தான். எடை 40 கிலோ மட்டுமே. இவ்வளவு குறைந்த எடை மற்றும் உயரம் கொண்ட பசுவை கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால் இந்த மாணிக்கம் பசு ஒரு ஆட்டின் உயரத்தை விட சிறியது. இந்தப் பசுவை கேரளாவை சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பம்தான் பராமரித்து வருகிறது. இந்தப் பசுவை அவர்கள் அடிக்கடி காரில் ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வார்கள்.

அங்குள்ள ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீரில் நீண்டநேரம் விளையாடுவது தான் இந்தப் பசுவுக்கு மிகவும் பிடித்ததாம். ஒரு காலத்தில் அந்த ஊருடைய பெயர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், நாளடைவில் உலக மக்களுக்கு தெரிய காரணம் இந்த பசுதான். நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு சென்று பசுவைப் பார்த்து வருகின்றனர். கின்னஸ் சாதனையில் கூட இந்த பசு இடம் பிடித்துள்ளதாம். இந்தப் பசுவை தனது குடும்ப உறுப்பினர் போல பாலகிருஷ்ணன் குடும்பம் அன்புடன் பராமரித்து வருகிறது.

Categories

Tech |