செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோபல் சாதனை பதிவு நிறுவனம் நிர்வாகிகள், ஆட்சியாளர் மாலினி, கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தணியஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இடைவிடாமல் இடுப்பில் வளையங்களை சுற்றி சாதனை படைத்துள்ளார். அதன் பின்னர் அதிகாரிகள் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.