தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணை தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், மருத்துவர் திவ்யா ராம்குமார், பள்ளி டீன் கவுசல்யா, சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 120 மாணவர்கள் சேர்ந்து 75 நிமிடத்தில் 15 ஆயிரம் வண்ணம் தீட்டப்பட்ட பேப்பர் டம்ளர்களை கொண்டு 21 அடி நீளமும், 31.5 அடி அகலம் கொண்ட தேசியக்கொடியை உருவாக்கினர். மேலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்தும் விழாவை சிறப்பித்துள்ளனர். இதனையடுத்து தேசியக்கொடியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.