Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. 5 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவன்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சின்னாங்குப்பம் பகுதியில் குறிஞ்சி மெட்ரிக் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஹரேந்திரா என்ற மாணவன் மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் சுற்றும் உலக சாதனை போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவனை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் மனோகரன், செயலாளர் மனோகரன், பொருளாளர் சுரேஷ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |