ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த நபருக்கு 24 கோடி லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள சிவமோகா என்ற மாவட்டத்தை சேர்ந்த சிவமூர்த்தி கிருஷ்ணப்பா என்பவர் கடந்த 15 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரியை கடந்த மூன்று வருடங்களாக கிருஷ்ணப்பா தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். தனக்கு ஒரு நாளாவது பெரிதாக அதிர்ஷ்டம் அடித்து விடாதா, என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது 24 கோடி பரிசு தொகை லாட்டரியில் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, என் முதல் விருப்பமே எங்கள் சொந்த ஊரில் என் குடும்பத்தினருக்காக பெரிய வீடு ஒன்றை கட்டுவது தான் என்றார். மேலும் மீதி பணத்தை தன் குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பேன் என்றும் தனக்கு இவ்வளவு தொகை பரிசு விழுந்ததை என்னால் முதலில் நம்பமுடியவில்லை என்றும் அதன் பிறகு தான் நம்பியதாக தெரிவித்துள்ளார்.