நாம் எதற்காக தண்ணீர் குடிக்கிறோம் என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவை விட மிக முக்கியமானது தண்ணீர். ஒரு உயிரினம் தண்ணீர் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம். அதிலும் குறிப்பாக மனிதர் தண்ணீர் இல்லாமல் ஒருநாள்கூட உயிர் வாழ முடியாது. எதற்காக நாம் தண்ணீர் குடிக்கிறோம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தண்ணீர் குடிப்பது சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது. மலசிக்கலை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இதயத்துடிப்பை நிலைப்படுத்துகிறது. மூட்டுகளுக்கு ஈரப் பசையை அளித்து உராயாமல் காக்கிறது. உறுப்புகளையும் திசுக்களையும் பாதுகாக்கிறது. உடல் வெப்பநிலையை பராமரிக்கிறது. சோடியம் சமநிலையைப் பராமரிப்பது. நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை பராமரிக்கிறது. இவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் தண்ணீரை தினமும் குறைந்தபட்சம் ஆறு லிட்டராவது குடிப்பது மிகவும் அவசியம். அவ்வாறு தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்தால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.