Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நஷ்டமா….? கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வாழ்வாதாரத்தை இழக்கும் குடும்பங்கள்….!!!!

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் பிடி  தொழில் முடங்கியுள்ளது.

தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து  330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடலில் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்புகிறது. மேலும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட   கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் கூறியதாவது,”எங்கள் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 7 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், 1  கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்” கூறியுள்ளனர்.

Categories

Tech |