ஜம்மு-காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் விவரங்களை முதன்முறையாக சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பலியாகினர். சீன ராணுவ வீரர்கள் பலியான தகவலை மறுத்து வந்த அந்நாட்டு அரசு தற்போது முதன்முறையாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகளையும் அறிவித்துள்ளது.