உலகிலேயே அதிக நேரம் பள்ளிகளை நடத்தும் நாடுகளை பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.
பல நாடுகளில் பல விதமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. ஏன் தமிழகத்தில் மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பள்ளி நேரங்கள் உள்ளன. அப்படி உலகில் அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகளைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. இங்கு பள்ளிகள் ஆறரை மணி நேரம் வரை இயங்குகிறது. அடுத்து உள்ளது பிரான்ஸ், இங்கு ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பள்ளிகள் செயல்படுகின்றது. அடுத்து பிரான்சுக்கு நிகராக உள்ளது சவுத் கொரியா. இங்கு 8 1/2 லிருந்து 9 மணி நேரம் பள்ளிகள் இயங்குகிறது.
இதில் அடுத்து இருப்பது கென்யா நாடு. இங்கு பள்ளிகள் ஒன்பதிலிருந்து பத்து மணி நேரம் வரை பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த ஒன்பது மணி நேரம் எப்படி மாணவர்களை வைத்து சமாளிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. கடைசியாக இருப்பது சைனா அங்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக பள்ளிகள் இயங்குகின்றன. இதனால்தான் அங்குள்ள பள்ளி மாணவர்கள் அதிக அறிவுத் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.