கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கணவரை இழந்த நஞ்சம்மாள் என்பவர் தனது மகன் முறுகேஷுடன் வாழ்ந்து வந்துள்ளார். முருகேஷ் தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்துள்ளார். வருகிற 10- ஆம் தேதிக்குள் கல்லூரி கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் தனது தாய் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது எனக் கூறி மன உளைச்சலில் இருந்த முருகேஷ் படிப்பை தொடர முடியாமல் போய்விடும் என்ற விரக்தியில் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.