Categories
உலக செய்திகள்

இவ்வளவு பணம் தேவையா….? உக்ரேனை மீண்டும் கட்டி எழுப்ப…. அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்….!!

உக்ரைன் நாட்டை  மீண்டும் கட்டியெழுப்ப  750 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று உக்ரைனிய ஜானதிபதி  ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் திங்களன்று நடந்த  சர்வதேச மாநாட்டில் பேசிய ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி, போரினால் சிதைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 750 பில்லியன் டாலர்கள் அதாவது இலங்கை ரூபாயில் 2 கோடியே 68 லட்சம் கோடிகள் செலவாகும். இது ஜனநாயக உலகில் பகிரப்பட்ட கடமை என்று அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பாரிய அழிவு குறித்து அதனை மீண்டும் கட்டமைக்க நாட்டிற்கு என்ன தேவை என்பது குறித்து ஜெலென்ஸ்கி விவரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் மறுசீரமைப்பு என்பது ஒரு தேசத்தின் உள்ளூர் பணி அல்ல, இது முழு ஜனநாயக உலகின் பொதுவான பணியாகும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்த சர்வதேச மாநாட்டில் உக்ரைனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) கூறியதாவது, “நாட்டை மீண்டும் கட்டமைக்க, 750 பில்லியன் அமெரிக்க டாலர் தேவை என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கான முக்கிய ஆதாரம் ரஷ்யா மற்றும் ரஷ்ய தன்னலக்குழுக்களின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டெனிஸ் கூறியுள்ளார். மேலும், ரஷ்ய அதிகாரிகள் இந்த  போரை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்கள் தான் இந்த பாரிய அழிவை ஏற்படுத்தினார்கள், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

Categories

Tech |