71 அடி உயரத்தில் நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நவகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர், நவ காளியம்மன் போன்ற சன்னதி அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு தமிழகத்தில் முதல் முறையாக 71 அடி உயரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. தமிழகத்தில் முதல் முறையாக 71 அடி உயரத்தில் நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மனை தரிசனம் செய்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.