கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்தில் இருந்து உதவிகள் இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பல உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் போன்ற உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 50 வெண்டிலேட்டகள் மற்றும் பிற மருந்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இன்று காலை வந்தடைதுள்ளது.
#Watch | A flight from Switzerland, carrying 600 oxygen concentrators, 50 ventilators, and other medical supplies arrived in India early this morning. pic.twitter.com/8g7zErFWVu
— ANI (@ANI) May 6, 2021