Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காடனேரி பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சேலை, வேட்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அயிரை மீன், ஜிலேபி, விரால், கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |