சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே. ஆத்தங்குடி கிராமத்தில் முக்கண் கண்மாய் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற திருவிழாவில் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலை, வேட்டி ஆகியவற்றை பயன்படுத்தி கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பிடித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்.