மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்டத்தில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகமூர்த்தி தலைமையிலான தனிப்படடை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோபிநாத் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை பிடித்து செய்த விசாரணையில் அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி அதனை குறைந்த விலைக்கு திருவையாற்றில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது கோபிநாத் விற்பனை செய்த 5 லட்சம் மதிப்புள்ள 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.