விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பங்கேற்றனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணையத்தில் மாறி மாறி திருமண புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து விரைவில் சென்னையில் பிரமாண்டமாக ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ள இவர்கள் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ரெசாடார்ட்டில் ஹனிமுனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக மஹாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் நடைபெற்ற நளங்கு போட்டோ வெளியாகி உள்ளது. இதில் கழுத்து நிறைய முழுக்க முழுக்க தங்க நகைகளுடன் நெற்றியில் குங்குமத்துடன் பிங் நிற பட்டுப்புடவையில் மகாலட்சுமி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ரவீந்தர் சாருக்கு மகாலட்சுமி மீது உள்ள காதல் இதிலேயே தெரிகிறது. காதல் மனைவியை தங்க நகைகளால் அலங்கரித்து பிரமிக்க வைத்துள்ளார் என்று கூறி வருகின்றனர். மேலும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.