தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதுவரை நமது தமிழகம் முழுவதும் 2,252 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,662 நியாயவிலைக் கடைகள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.