Categories
அரசியல்

இவ்வளோ பேசுறீங்கள…. தேர்தல்ல தனியா நின்னு காட்டுங்க… “நாயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த அதிமுக….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் வாய்திறக்க வேண்டியுள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் அண்ணாமலை தைரியமாக செய்தியாளர்களிடம் எதை வேண்டுமானாலும் கூறுவார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சிஅல்ல. பாஜகதான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது எனக் கூறியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல அதிமுகவின் தயவால் சட்டமன்றத்துக்கு நுழைந்து விட்டு அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவிற்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் நயினார் நாகேந்திரன்” என விமர்சித்துள்ளது.

Categories

Tech |