இஸ்ரேலில் பிரதமர் வருகை தந்த நகரில் திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசாவிலிருந்து இஸ்ரேலின் பீர்ஷேபா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பீர்ஷேபா நகருக்கு வருகை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
#BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj
— Amichai Stein (@AmichaiStein1) March 23, 2021
மேலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரதமரை பாதுகாப்பு காவலர்கள் அழைத்து செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
https://twitter.com/disclosetv/status/1374418526950191114