இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தன் படைகளை காசா பகுதியில் களமிறக்கியதாக தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகின்றன.
துருக்கி, இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைகள் காசா குறித்த தெளிவான தீர்வை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் காசாவில், துருக்கி இராணுவம், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இறங்கியிருப்பதாக இணையதளங்களில் 3 புகைப்படங்களை வெளியிட்டு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
மேலும் அதில் காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தகவல்கள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கி அதிபரின் தகுந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பே இஸ்ரேல்-காசா பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் துருக்கியின் படைகள் தற்போதுவரை காசாவிற்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளங்களில் பரவும் ஒரு புகைப்படம், ரஷ்ய ராணுவத்திற்கு உரியதாம். மேலும் அடுத்த புகைப்படம் கடந்த 2020 ஆம் வருடம், செப்டம்பர் மாதத்தில் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் பதிவிட்ட புகைப்படம்.
அடுத்ததாக மூன்றாவது புகைப்படம், துருக்கி ராணுவம் தென்கிழக்கு துருக்கியில் உள்ள குர்திஸ் பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது. எனவே இணையதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.