Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்பந்தம்… கண்டனம் தெரிவித்துள்ள ஈரான்…!!!

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

 

இஸ்ரேல் கடந்த 1948ம் ஆண்டு தனிநாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக போரில் இறங்கினர். அந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி கண்டது. இருந்தாலும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபுநாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்த நாட்டுடன் தூதரகம் மற்றும் வர்த்தகம் என எந்தவிதமான உறவுகளையும் அரபு நாடுகள் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தொடர்ந்து பல மோதல்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1979ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேல் நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்பின்னர் அந்த இரு நாடுகளும் இஸ்ரேல் நாட்டுடன் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு உறவுகளை ஏற்படுத்திக்கொண்டது. இஸ்ரேலை மிகக்கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபரான சேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்ரேலை ‘எதிரி’ என்று கூறியிருந்தார். ஐக்கிய அரபு அமீரகம் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு பிரச்சனையில் இஸ்ரேலை கடுமையாக விமர்சனம் செய்தது. அதுமட்டுமன்றி இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்து கொண்டிருக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் உள்ள மோதலை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தது.

அதன் பலனாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க தூதரக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு உருவாகி இருக்கிறது. இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடுகளில், வளைகுடா முதலாவதாகவும் மற்றும் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு உறவை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவும் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு புதிய பாதை வழி வகுக்கவும் இந்த தூதரக ஒப்பந்தம் கட்டாயம் உதவும். வருகின்ற வாரங்களில் தூதரகங்கள் அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடக்கும். அதுமட்டுமன்றி தொழிலகம், சுற்றுலா, விமான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, எரிசக்தி துறைகளில் இணைந்து செயலாற்றுவது பற்றி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” மிகப்பெரிய செய்தி. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்னும் இரு பெரும் நண்பர்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை உண்டாகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கைதாகியுள்ள தூதரக ஒப்பந்தத்திற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்து, இது ஒரு தேசத் துரோக நடவடிக்கை என்று கூறியுள்ளது. அது மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கின்ற தங்கள் நாட்டு தூதரை உடனடியாக நாடு திரும்பும்படி பாலஸ்தீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் தூதரக உறவு தொடங்கி இருப்பதை ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இதுபற்றி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஐக்கிய அரபு அமீரகம் உடனான உறவுகளை இயல்பாகவே பாலஸ்தீனர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதன் மூலம் இனி வளைகுடா நாடுகளின் உள்விவகாரங்களில் இஸ்ரேல் கட்டாயம் தலையிட முயற்சி செய்யும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளது.

Categories

Tech |