இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இந்த அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம், குறுகிய மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மன அமைதி ஒப்பந்தத்தில் மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியா இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ” இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா பங்கேற்க விரும்பும் என நான் எதிர்பார்க்கிறேன். அப்படி அந்நாடு விருப்பம் கொண்டால் அதனை சாத்தியமாக்குவதற்கான வேலைகளில் நான் ஈடுபடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.