சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்விட்டர் பதிவில், ” எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் எனது மகிழ்ச்சி கரமான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பெருமை கொள்வதற்கு பல இருக்கின்றன” என்று இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமருக்கு, இந்திய பிரதமர் நன்றி கூறி இருக்கிறார். இது பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ” சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த எனது நண்பர் நெதன்யாகுவுக்கும், அற்புதமான இஸ்ரேல் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தியா மீதான இஸ்ரேல் பிரதமரின் சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது. இஸ்ரேலுடன் அதிகரித்துவரும் வலுவான உறவுகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.